வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (11:52 IST)

ஆசியாவின் முதல் பெண்கள் மொபைல் ஃபுட் ட்ரக்: பெங்களூரு பெண்கள் அசத்தல்

பெங்களூருவில் இயங்கும் 'செவன்த் சின்' ஃபுட் ட்ரக் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை மட்டுமே கொண்டு இயக்கப்பட்டும் ஆசியாவின் முதல் ஃபுட் ட்ரக் என்ற பெருமைக்குச் சொந்தமாகியுள்ளது.


 
 
இதில் டிரைவிங்கில் தொடங்கி குக்குங், க்ளீனிங், அக்கவுன்டிங் என அனைத்து வேலைகளும் பெண்களே பார்க்கின்றனர்.
 
'செவன்த் சின்' ஃபுட் ட்ரக்கின் உரிமையாளர் அர்ச்சனா சிங். '' இந்த ஃபுட் ட்ரக்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சர்வதேச உணவு வகையில் இந்தியப் பாரம்பர்ய ருசியும் கலந்திருக்கும். அதை நாங்கள் 'குலோக்கல்' என்று குறிப்பிடுகிறோம். அதாவது, குலோபல் ப்ளஸ் லோக்கல் " என்கிறார் அர்ச்சனா.
 
பாஸ்தா, மலாய் வெஜ்ஜி ரஸ்து, செட்டிநாடு சைடு டிஷ்கள் என்று 'செவன்த் சின்'னின் அன்றாட மெனு. வாரத்தில் ஆறு நாட்கள் ஐ.டி நிறுவனங்கள், கல்லூரிகள், பொது நிகழ்ச்சிகள் என மக்கள் கூடும் இடங்களில் பிஸியாக இருக்கும் இவர்கள், ஏழாவது நாள் கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட இடங்களில் இலவச உணவு அளிக்கிறது.
 
பெண்கள் வாழ்க்கையில் பொருளாதாரத்துக்காக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது.