உயிரை விடவும் தயார்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!
நாட்டுக்காக உயிரை விடவும் தயார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டை பாஜகவினர் சமீபத்தில் தாக்கியதாகவும் எனவே டெல்லி முதல்வர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தனது வீடு மீது தாக்குதல் நடத்தியது குறித்து கருத்து கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் என் தாய் நாட்டிற்காக உயிரை விடவும் தயார் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது