வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (11:25 IST)

இறந்த ராணுவ வீரர் உயிருடன் திரும்பிய ஆச்சர்யம் - விபத்தில் நினைவிழந்து விபத்திலேயே நினைவு திரும்பி அதிசயம்

இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்து நின்ற சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
 

 
கடந்த 2009-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தரம்வீர் யாதவ் டேராடூனில் நிகழ்ந்த கார் விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு ஓய்வூதியத் தொகையும் அளித்து வருகிறது.
 
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இரவு, தரம்வீர் யாதவ் தனது வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதனை பெரிதாக கண்டுகொள்ளாத அவரது அவரின் தந்தை, தொடர்ந்து சத்தம் கேட்க கதவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, டேராடூன் கார் விபத்தில் தரம்வீர் யாதவ் இறந்ததாக தவறாக முடிவு செய்யப்பட்டது. அந்த விபத்தில் அவர் உயிர் பிழைத்தாலும், சுயநினைவை இழந்துவிட்டார்.
 
சுயநினைவு இழந்த நிலையில், ஹரித்வார் பகுதியில் சுற்றித் திரிந்த தரம்வீர் மீது, இரண்டு சக்கர வாகனம் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் தரம்வீர் யாதவிற்கு சுயநினைவு திரும்பியுள்ளது.
 
இது குறித்து அவரது தந்தை கூறுகையில், ’தொடர்ந்து கதவு தட்டும் சத்தம் கேட்டதும், வாசலை திறந்து பார்த்தேன். இவ்வளவு நாட்களாக இறந்தாக நினைத்த எனது மகன் உயிருடன் நின்றிருந்ததை பார்த்ததும் எனக்கு பேச்சே வரவில்லை’ என்று கூறியுள்ளார்.