1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (10:31 IST)

தந்தையை போலவே பைலட் ஆவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் பேட்டி

தந்தையை போலவே பைலட் ஆவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் பேட்டி
தந்தையைப் போலவே விமானப்படையில் பைலட்டாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ப்ரீத்தி சிங் சவுகான் அவர்களின் மகள் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் குன்னூர் அருகே விமான விபத்தில் பலியான 13 பேர்களில் ஒருவர் விங் கமாண்டர் சிங் சவுகான் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில் அவரது 12 வயது மகள் ஆரத்யா உருக்கமாக பேட்டியளித்தார்
 
தந்தையைப் போலவே விமானப்படையில் பைலட்டாக எனது லட்சியம் என்று அவர் தெரிவித்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது