சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அப்பல்லோ மருத்துவர் கைது
சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அப்பல்லோ மருத்துவர் கைது
குஜராத், காந்திநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவரை அங்குள்ள மருத்துவர் ரமேஷ் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த வாரம் 21 வயதான இளம்பெண் ஒருவர் காந்திநகர் அப்பல்லோ மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த இளம்பெண்ணை மருத்துவர் ரமேஷ் சவுகான் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த கொடுமையை வார்டு ஊழியர்கள் உதவியுடன் அரங்கேற்றியுள்ளார் மருத்துவர் ரமேஷ். சிகிச்சை அளிப்பது போல் வெளியில் காட்டிக்கொண்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் மருத்துவர் ரமேஷ்.
அந்த பெண்ணிற்கு கடுமையான வலி ஏற்பட அவரது உறவினர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதித்தனர். அதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பின்னர் காந்திநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவர் ரமேஷ் சவுகான் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வார்டு ஊழியர் இரண்டு பேரையும் கைது செய்தனர்.