திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (23:45 IST)

ரஜினியை திடீரென சந்தித்த முதலமைச்சரின் மனைவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக மும்பை தாராவி பகுதியில் 'காலா' படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் என்பது தெரிந்ததே. படப்பிடிப்பு முடிந்து ஓய்வு நேரத்தில் ரஜினி பல அரசியல் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை செய்து வருகிறார்



 


இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அவர்களின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸ் மரியாதை நிமித்தமாக சற்று முன்னர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.

எம்பிஏ பட்டதாரியான அம்ருதா, பல வருடங்கள் வங்கியில் உயர் பதவி வகித்தவர், அதுமட்டுமின்றி அவர் ஒரு நல்ல கிளாசிக்கல் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மனைவி அவரை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.