251-350 வரை காற்று மாசு: டெல்லி மக்கள் அவதி!
251-350 வரை காற்று மாசு: டெல்லி மக்கள் அவதி!
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு மிகவும் அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். குறிப்பாக சமீபத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளிக்குப் பின்னர் டெல்லியில் காற்றின் மாசு பல மடங்கு அதிகரித்தது
ரு நகரின் காற்றின் மாசு தரநிலை 60க்கு மேல் இருந்தாலே அது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என காற்று மாசுபாடு துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது
ஆனால் டெல்லியில் தற்போது 251 முதல் 351 வரை காற்று மாசு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்நகரில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து கடுமையாக இருப்பதால் அம்மாநில மக்கள் பலர் டெல்லியை விட்டு வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது
ஏற்கனவே அதிக காற்று மாசு இருக்கும் காரணத்தினால் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியும் டெல்லியில் இருந்து வேறு பகுதியில் சில நாட்கள் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுவை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் மாசுக்கட்டுப்பாடு துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது