’தி கேரளா ஸ்டோரி’: மத்திய பிரதேசத்தை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் வரிவிலக்கு..!
’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலம் வரி விலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலம் வரிவிலக்கு அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும் இந்த படம் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலம் இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலம் வரி விலக்கு அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
Edited by Mahendran