செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (15:56 IST)

மணிப்பூர் கலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம்: திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்பு..!

மணிப்பூர் கலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம்: திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்பு..!
மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதில் திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்டுக்கடங்காத கலவரம் நடந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் என்று போட்டியுள்ளார். 
 
இந்த நிலையில் இந்தக் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் எம்பிகள் கலந்து கொண்டனர்
 
அந்த வகையில் திமுக எம்பி திருச்சி சிவா மற்றும் அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் இந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வழியாக உள்ளன.
 
Edited by Mahendran