1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2023 (07:48 IST)

IRCTCக்கு போட்டியாக களமிறங்கிய அதானி.. இனி ரயில் டிக்கெட்டும் வாங்கலாம்..!

ரயில் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்தின் 100% பங்குகளை அதானி நிறுவனம் வாங்கி விட்டதால் IRCTC போட்டியாக இனி அந்த இணையதளத்திலும் பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. 
 
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC இணையதளம் மட்டுமின்றி வேறு சில தனியார் நிறுவனங்களும் உள்ளன. அந்த வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ட்ரெயின் மேன் என்ற நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து IRCTCக்கு போட்டியாக ரயில் டிக்கெட் விற்பனையில் அதானி குழுமம் கால் பதிக்கிறது என்று கூறப்படுகிறது.
 
சில மாதங்களுக்கு முன்னால் ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக மிகப்பெரிய சரிவை சந்தித்த அதானி நிறுவனம் நான்கே மாதங்களில் மீண்டும் விட்டது என்பதும் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு அதானி நிறுவனம் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva