1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (11:31 IST)

நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....

மலையாள நடிகை மைதிலியுடன் தான் இருக்கும் அந்தரங்கப் புகைப்படங்களை, அவரின் முன்னாள் காதலர் வெளியிட்ட விவகாரம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை மைதிலி, சினிமா தயாரிப்பு நிர்வாகியான கிரண் என்பவருடன் 2008ம் ஆண்டு முதல் நெருங்கி பழகியுள்ளார். ஆனால், தான் ஏற்கனவே திருமணமானவர் என்பதை கிரண் அவரிடம் மறைத்த விவகாரத்தை தெரிந்து கொண்ட பின் அவர் கிரணை விட்டு பிரிந்து விட்டதாக தெரிகிறது.
 
ஆனால், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தேவையான பணம் கொடுக்கவில்லை எனில் அதை இணையத்தில் வெளியிடுவேன் என மைதிலியை கிரண் மிரட்டி வந்துள்ளார். ஆனால், அதை மைதிலி பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.


 

 
இந்நிலையில், அதில் சில படங்களை கிரண் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் அவரும், நடிகை மைதிலியும் அரை நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மைதிலி, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
இதன் அடிப்படையில், கிரணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.