செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (12:51 IST)

கன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!

கன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் வன்முறைகள் வெடித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் நிலமை கட்டுக்குள் இருக்கிறது.


 
 
கர்நாடக மக்கள் தமிழர்களையும், தமிழர்களின் உடமைகளையும் தாக்கி வருகின்றனர். இவர்களுடைய இந்த போராட்ட முறையை பலரும் கண்டித்து வருகின்றனர். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதென்றால் அதனை சட்டப்போராட்டம் நடத்தி தங்களுக்கான நியாயத்தை பெறலாம். அதை விட்டுவிட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிலமை சரியாகிவிடுமா?.
 
இந்நிலையில் கன்னடர்கள் மற்றும் தமிழர்களின் அறவழியற்ற இந்த போராட்டத்தை கைவிட பிரபல தமிழ் நடிகரும் கர்நாடகாவை சேர்ந்தவருமான நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 
 
தங்களின் வேதனை தனக்கு புரிகிறது ஆனால் அதனை வெளிப்படுத்தும் போராட்ட முறை தவறானது. சட்டத்தோடு போராடி நியாயத்தை பெறுங்கள். உடமைகளை எரிப்பதும், தாக்குவதும் சரியல்ல. இது தான் வருங்கால சந்ததியினருக்கு போராட்டம் என்றால் என்ன என்று கற்றுக்கொடுப்பதா. முதலில் மனிதர்களை போல செயல்படுங்கள். நம் சகோதர சகோதிரிகளை ஏன் தாக்குகிறீர்கள். மனிதர்களை போல செயல்படுங்கள் என அவர் கூறியுள்ளார்.