கலாபவன் மணி மரணத்திற்கு திலீப் காரணமா? - அதிர்ச்சி தகவல்


Murugan| Last Updated: வெள்ளி, 14 ஜூலை 2017 (15:54 IST)
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் மீது பல திடுக்கிடும் புகார்கள் எழுந்து வருகிறது.

 

 
சென்ற ஆண்டு மரணமடைந்த கேரள நடிகர் கலாபவன் மணி மரணத்தில், திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கலாபவன் மணி மரணம் தொடர்பான வழக்கில், இதுவரை கேரள போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.
 
இந்நிலையில்தான், கேரள நடிகை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, திலீப்தான் கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் என அவரின் சகோதரர் ராமகிருஷ்ணன், சிபிஐ அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதேபோல், மலையாள சினிமா இயக்குனர் பைஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலும், கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப்தான் காரணம் எனவும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபற்றி சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
ஏற்கனவே நடிகை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதால் எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், கலாபவன் மணி மரணத்திலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது என எழுந்துள்ள புகார் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :