திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (11:25 IST)

இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்: ஆசிட் அடித்து விரட்டிய கொடுரம்!!

இந்துக்கள் வாழும் பகுதியிலிருந்து வீட்டை காலி செய்ய மறுத்த முஸ்லீம் பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. 


 
 
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் முஸ்லீம் இளம்பெண் ஒருவர், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்து குடும்பங்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்த பகுதியில், அந்த இளம்பெண்ணின் குடும்பம் மட்டுமே ஒரே முஸ்லீம் குடும்பம். 
 
இதனால், அவர்களை அந்த பகுதியிலிருந்து காலி செய்யுமாறு, இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
 
முன்னாள் ராணுவ வீரரான சுதிர் சிங் தோமர் என்பவர் அந்த இளம் பெண் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். 
 
இதனால் அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுதிர் சிங், அந்த இளம்பெண் மீது ஆசிட் வீசியுள்ளான். 
 
அந்த பெண்ணின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. சுதிர் சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளார்.