1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (09:04 IST)

ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் அவசியம்

ஜனவரி 1ம் தேதி முதல் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 

 
தற்போது ஏ.டி.எம், கிரெடிட் கார்டுகள், மொபைல் பேங்கிங், இணையதள வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் ரகசிய எண்( பின் நம்பர்) மற்றும் பாஸ்வேடுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பதிலாக இந்த சேவைகளுக்கு ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
 
இதன் வெளிப்பாடாக, ஜனவரி 1ம் தேதி முதல் வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆதார் எண் மூலம் செய்யப்படவேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
 
பணமற்ற பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதேபோல், வங்கிகளில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் கே.ஒய்.சி முறைக்கு பதிலாக ஆதார் எண் பயன்படுத்தப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி கணக்குகளிலும், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதிக்குள், ஆதார் எண்னை முழுமையாக இணைக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.