வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:39 IST)

70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்

இஸ்லாமாபாத்: 70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண், முதலிரவின் ஏமாற்றிவிட்டு, நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள  சர்கோதா மாவட்டத்தச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா (70).  இவருக்கும் நஜ்மா பிபி என்ற 28 வயது இளம் பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.
 
இந்த திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுத்தவர்களுக்கு 24400 ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் தனதுபுது மனைவி நஜ்மா பிபிக்கு ரூ.70000 பணம் கொடுத்ததுடன்,  முதல் மனைவியின் நகைகளையும் கொடுத்துள்ளார்.
 
இதனிடையே முஸ்தபாவுக்கும், நஜ்மா பிபிக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு நடந்துள்ளது. முதலிரவின் போது, நஜ்மா பிபி தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த முஸ்தபா மயங்கிவிட்டார். பின்னர் காலையில் முஸ்தபா எழுந்த போது அதிர்ச்சி அடைந்தார்.  வீட்டில் இருந்த  விலை உயர்ந்த பொருட்களை திருடி கொண்டு நஜ்மா பிபி ஓடிவிட்டதை முஸ்தபா புரிந்து கொண்டார்.
 
இதையடுத்து முதியவர் முஸ்தபா, போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை நஜ்மா பிபி, ஒரு கும்பலுடன் சேர்ந்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், அவர்களை விசாரித்து கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 
பாலில் மயக்க மருத்து கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் பஞ்சாப் மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.