திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (07:39 IST)

மோடி பெயரில் ஒரு ஆடு: ரூ.70 லட்சத்திற்கு ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்!

மோடி பெயரில் ஒரு ஆடு: ரூ.70 லட்சத்திற்கு ஏலம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பெயரில் உள்ள ஒரு ஆடு 70 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்ட நிலையில் ஆட்டின் உரிமையாளர் அந்த ஆட்டை ஏலம் விட மறுத்துவிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சங்கோலா என்ற பகுதியில் நேற்று நேற்று கால்நடை வளர்ப்பு விலங்குகளின் ஏலம் நடந்தது இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பாபுராவ் மெட்காரி என்பவர் மோடி பெயரில் உள்ள ஒரு ஆட்டை ஏலம் விட வந்தார். அவர் அந்த ஆட்டை ஏலம் விட்டபோது லட்சக்கணக்கில் அந்த ஆட்டை விலைக்கு வாங்க பலர் முயற்சித்தனர் 
 
ஒரு கட்டத்தில் அந்த ஆட்டின் விலை 70 லட்ச ரூபாய்க்கு ஒருவரிடம் கேட்டார். ஆனால் 70 லட்ச ரூபாய்க்கு தனது ஆட்டை தரமுடியாது என்றும் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே விற்பனை செய்வேன் என்றும் அந்த ஆட்டின் உரிமையாளர் கூறினார் 
 
இதனை அடுத்து கடைசி வரை அந்த ஆடு விற்பனை ஆகவில்லை என்பதால் ஆட்டின் உரிமையாளர் ஏமாற்றத்துடன் வீடு சென்றார். அடுத்த வாரமும் இந்த ஆடு ஏலத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது