வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (12:46 IST)

போலீசையே அலறவிட்ட கொடூர சம்பவம்: துடிதுடிக்க கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்

தெலிங்கானாவில் தொழில் போட்டி காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் நடுரோட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலிங்கானாவில் இரு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் முக்கியமான சாலையில் அந்த ஆட்டோ டிரைவர் தனக்கு தொழில் போட்டியாக இருந்த மற்ற ஆட்டோ டிரைவரை கொடூரமாக குத்தி கொலை செய்தார். அங்கு இரண்டு போலீஸார் இருந்த போதிலும் அந்த கொலையை அவர்களால் தடுக்க முடியவில்லை.
 
ஒரு சிலர் மட்டுமே இதனை தடுக்க முயன்றனர். மற்றவர்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டும், அந்த சம்பவத்தைக் கண்டும் காணாமலும் சென்றனர். 
 
இறுதியாக அவனை சுற்றி வளைத்த போலீஸார், அவனை கைது செய்தனர். இச்சம்பவம் தெலிங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.