1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 ஜனவரி 2017 (16:52 IST)

கனரா வங்கி: 4,500 ரூபாய் எடுக்க, 80,000 ரூபாய் பண மழை!!

4500 ரூபாய் பணம் எடுக்க முயன்றபோது 80 ஆயிரம் மதிப்புக்கு நோட்டுக்கள் வந்து கொட்டிய சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கர்நாடக மாநிலம், மைசூர் நகரின், கும்பார கொப்பல் பகுதியிலுள்ளது கனரா வங்கி ஏடிஎம். இங்கு சுந்தரேஷ் என்பவர் 4500 ரூபாய் பணம் எடுக்க சென்றுள்ளார். 
 
ஆனால் அவருக்கு அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி. மொத்தம் 80 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வெளியே வந்து விழுந்தது. இதனை அவரது நண்பர்களுக்கு தெரிவிக்க, சுந்தரேஷின் 5 நண்பர்கள் ஏடிஎம் வந்து 80 ஆயிரத்தை பெற்றுள்ளனர். 
 
இதனால் எதேனும் பிரச்சனை வருமோ என எண்ணி சுந்தரேஷும் நண்பர்களும், கனரா வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டனர். 
 
விரைந்து வந்த அதிகாரிகள் ஏடிஎம்மை மூடிவிட்டு சோதித்து பார்த்தனர். 100 ரூபாய் தாள் வைக்க வேண்டிய இடத்தில் 2000 நோட்டுக்களை வைத்துவிட்ட ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியர்களின் தவறால் இதுபோல நடந்துவிட்டதாக தெரியவந்தது.