வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (16:03 IST)

பலாத்காரம் செய்தவனுக்கே கட்டி வைத்த ஊர்: கொடுமை தாங்காமல் 7 மாதத்தில் தற்கொலை செய்த பெண்!

பலாத்காரம் செய்தவனுக்கே கட்டி வைத்த ஊர்: கொடுமை தாங்காமல் 7 மாதத்தில் தற்கொலை செய்த பெண்!

ஹரியானா மாநிலத்தில் பலாத்காரம் செய்த நபருக்கே ஊர் பஞ்சாயத்து முடிவெடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் 7 மாதம் கடந்த நிலையில் அந்த பெண் தற்போது தற்கொலை செய்துள்ளார்.


 
 
யமுனா நகர் மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கின் போது குறுகிட்ட ஊர் பஞ்சாயத்து அவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதால் இந்த வழக்கு தேவையற்றது என சமரச முயற்சியில் ஈடுபட்டு இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வழக்கில் இருந்து அனுஜை விடுவித்தனர்.
 
இந்நிலையில் அனுஜின் தாயார் அந்த பெண்ணை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார். வரதட்சணை மற்றும் அந்த பலாத்கார வழக்கிற்கு ஆன செலவை தரும்படி கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் திருமணமான 7-வது மாதத்திலேயே தற்கொலை செய்துள்ளார்.
 
இதனையடுத்து அனுஜின் குடும்பத்தின் மீது தற்கொலை செய்துகொண்ட அந்த பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார். இதில் போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.