1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (15:07 IST)

7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 11 பேர் பலி

ஐதராபாத் நகரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நன்கராம்குடா என்ற இடத்தில் வியாழன் இரவு திடீரென 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
நேற்று இரவு வரை மீட்பு பணி நடைப்பெற்றது. விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தில் பணிபுரிந்த பணியாளர்கள். 
 
இதையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். கட்டிட கட்டப்பட்டதில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளதாக துணை கமிஷனர் விஷ்வ பிரசாத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.