6-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்: வாலிபர் மீது வழக்கு பதிவு


Caston| Last Modified ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (21:50 IST)
கேரளாவில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இது தொடர்பாக வாலிபர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
கடந்த வாரம் கேரள மாநிலம் முணாற்றில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் வயிற்று வலி என கூறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
 
காவல் துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டை சேர்ந்த மது என்ற 20 வயதான வாலிபர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லதபோது சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபர் மீது காவல் துறையினர் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்குற்ற செயலில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்ய தேடி வருகின்றனர்.
 
பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல அமைப்பிடம் பதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :