புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:26 IST)

ஜூன் மாதத்தில் 4 வது அலை பரவ வாய்ப்பு?

ஜூன் மாதத்தில் 4 வது அலை பரவ வாய்ப்பு?
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில்  இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது கொரொனா தொற்று.

இதன் இரண்டாம் அலை கடந்த  2021 ஆம் ஆண்டு பரவியது. இதன் உருமாறிய கொரொனா வகைகள் பொதுமக்களைப் பெருமளவில் பாதித்தன.

இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் கொரொனா பரவியது. இது 3 வது அலை எனக்கூறப்பட்டது.

தற்போது இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம்  22 ஆம் தேதி கொரொனா 4 வது அலை தொடங்கக்கூடும் எனக் கான்பூர் நிபுணர்கள் கணித்துள்ளனர்.