1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (18:21 IST)

இன்னும் 45,000 கிராமங்களில் 4ஜி சேவையே இல்லை: தொழில்நுட்ப அமைச்சகம்!

சென்னை உள்பட பல நகரங்களில் 5ஜி தொழில்நுட்ப சேவை வந்துவிட்ட நிலையில் இன்னும் 45 ஆயிரம் கிராமங்களில் 4ஜி தொழில்நுட்பமே வரவில்லை என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 4ஜி தொழில்நுட்ப சேவை வழங்கப்படாத கிராமங்கள் எவ்வளவு என்று எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் இன்று பதிலளித்துள்ளது 
 
அதில் நாட்டில் 93 சதவீத கிராமங்களில் 4ஜி சேவை உள்ளன என்றும் 45 ஆயிரம் கிராமங்களுக்கு இன்னும் 4ஜி  சேவை வழங்கப்படவில்லை என்றும் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் தான் 4ஜி சேவை இல்லாத கிராமங்கள் அதிகம் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது
 
4ஜி  சேவையே இன்னும் பல கிராமங்களில் இல்லாத நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில்  5ஜி சேவை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran