1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (16:23 IST)

மீண்டும் ஆக்ஸிஜன் தட்டுபாடு; 49 குழந்தைகள் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் போன்று ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுபாடு காரணமாக 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே மாநிலத்தில் மீண்டும் ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் ஜுலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஃபரூக்காபாத் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் 296 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.