1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (10:37 IST)

46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.. காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி..!

பஞ்சாப் மாநிலத்தில் 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென பாஜகவில் இணைந்ததால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் என்ற சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது என்பதும் இந்த தொகுதியில் காங்கிரஸ் 10 முறை வென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில்  பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாக்கர் என்பவர் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் இவர் தனது சொந்த ஊருக்கு சமீபத்தில் சென்றார். அப்போது   துணை மேயர் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 46 கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்தார். 
 
அபோஹார் நகராட்சியில் மொத்தம் 50 இடங்கள் உள்ள நிலையில் 49 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 46 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு கட்சி மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran