வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (15:26 IST)

சிறையில் சசிகலா; புதிய வீடியோக்கள் நாளை வெளியாக வாய்ப்பு

சிறையில் சசிகலா இருக்கும் 2 புதிய வீடியோக்கள் கன்னட பத்திரிக்கை நிருபரிடம் உள்ளதாகவும், இன்று அல்லது நாளை வெளியாகும் என்று பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பெங்களூர்  சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் சொகுசாக இருக்கிறார் என்று முதலில் புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து புகார் அளித்த டிஐஜி பணிமாற்றம் செய்யப்பட்டார். பின் சசிகலா சிறையில் சொகுசாக இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. 
 
இன்று சிறை கண்காணிப்பாளர் அனிதாவுக்கு எதிராக சிறை கைதிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் தினகரன் சசிகலா சிறை சொகுசாக இருக்க அனிதாவுக்கு மாதந்தோறும் ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் சிறை கைதிகள் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் சசிகலா சிறையில் சொகுசாக இருந்த 2 புதிய வீடியோக்கள் கன்னட பத்திரிக்கை நிருபரிடம் உள்ளதாகவும். அந்த வீடியோக்கள் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.