1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:23 IST)

மயக்க மருத்து கொடுத்து 16 வயது இளம்பெண் கும்பல் பலாத்காரம்

புது டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


 

16 வயது நிரம்பிய பீகாரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், விபத்தில் சிக்கி நடக்க இயலாத நிலையில் இருக்கும் தனது மாமா, அத்தையை கவனித்துக் கொள்வதற்காக, புதுடெல்லிக்கு வந்து அவர்களுக்கு பணிவிடை புரிந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தூங்கச்சென்றபோது, அந்த சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து கலந்த துணியை வைத்து 3 பேர் கடத்தியுள்ளனர்.

பின்னர், அவரை ஒரு மறைவான இடத்திற்கு கொண்டு சென்று, மூவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். நீண்ட நேரம் கழித்து, வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை அத்தையிடம் கூறி அழுதார். இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், சிறுமியின் அத்தை, மாமா தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பிரசாந்த் (40), பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் விகாஸ் சிங் (30), சஞ்சீவ் (30) ஆகிய மூவரும் சேர்ந்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.