15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை காவலர் கைது


Abimukatheesh| Last Updated: சனி, 11 மார்ச் 2017 (16:04 IST)
ஹைதராபாத் நகரில் 15 வயது சிறுமியை ஆசைக்காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 
ஹைதராபாத் நகரில் உள்ள காமத்திபுரா காவல் நிலையத்தில் மஹபூப் என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி மஹபூப் வீட்டின் அருகே வசிந்து வந்துள்ளார்.
 
அந்த சிறுமிக்கு பெற்றோர் இல்லை, பாட்டியின் பராமரிப்பில் தான் வளர்ந்து வருகிறார். இதனால் மஹபூப் அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். பின் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார். அண்மையில் இந்த சம்பவம் சிறுமியின் அக்காவுக்கு தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து சிறுமியின் அக்கா மஹபூப் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியானால், மஹபூப் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மஹபூப்பிற்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன. 


இதில் மேலும் படிக்கவும் :