செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (15:29 IST)

தினமும் 10 மணி நேரம் பணிபுரியும் 102 வயது மருத்துவர்....

இந்தியாவிலேயே அதிக வயதுடைய மருத்துவர் புனே நாட்டில் வாழ்ந்து வருகிறார்.


 

 
புனேவில் வசித்து வரும் பல்வந்த் கத்பாண்டே என்பவருக்கு வயது 102 ஆகிவிட்டது. ஆனாலும், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். அதேபோல் வாரத்தின் 7 நாட்களும் ஓய்வே எடுக்காமல் அவர் சிகிச்சை அளிக்கிறார். அந்த பகுதியில் கைராசி மருத்துவராக விளங்கும் இவர் சிகிச்சையளிக்க மக்களிடம் அதிகபட்சம் ரூ.30 மட்டுமே வசூலிக்கிறார். அப்படி  சம்பாதிக்கும் பணத்தையும் ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து விடுகிறார்.
 
கடந்த மார்ச் 15ம் தேதி அதிக வயதுடைய மருத்துவர் என்ற சாதனையை அவர் பெற்றார். அன்றுதான் அவருக்கு 102 வயது தொடங்கியது. 
 
ஓய்வு பெற எனக்கு விருப்பமில்லை. என்னுடைய இறப்பு வரை நான் சிகிச்சை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கும் போதே நான் மரணம் அடைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.  எனக்கு செல்வம், புகழ் எல்லாவற்றையும் இந்த மருத்துவ தொழில்தான் கொடுத்தது என அவர் கூறியுள்ளார்.
 
அவரின் மகன் மற்றும் பேரன்கள் என அனைவருமே மருத்துவராகவே இருக்கிறார்கள். புனேவில் பல வருடங்களாக இவரிடமே பலரும் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.