திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (14:58 IST)

பட்டாசு ஆலையில் விபத்து - 10 பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் இன்று 15 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மின்கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
இதனால் இந்த ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தீ விபத்து காரணமாக ஆலையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போதிய பாதுகாப்பின்றி ஆலை நடத்தப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.