மோடி ஆர்.எஸ்.எஸ். ரவுடி, ராஜ்நாத் சிங் மோடியின் அடிமை - பேனி பிரசாத் வர்மா கடும் தாக்கு!

Beni Prasad Verma
Veeramani| Last Updated: புதன், 2 ஏப்ரல் 2014 (18:08 IST)
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரவுடி என்றும், ராஜ்நாத் சிங் மோடியின் அடிமை என்றும் கொண்டா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேனி பிரசாத் வர்மா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Beni Prasad Verma
மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா உத்தர பிரதேச மாநிலம் கொண்டா தொகுதியில் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் தலைவர் ராஜ்நாத் சிங்கை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
 
மாகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவே காரணம். மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரவுடி, ராஜ்நாத் சிங் மோடியின் அடிமை என்று பேனிபிரசாத் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :