ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. எம். முருகன்
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (18:13 IST)

காகிதப் புத்தகத்தில் மையின் எழுத்து…

இலக்கியப் படைப்பகளின் பங்களிப்பு..

 
இலக்கிய பங்களிப்பு
 
ஹோமரின் அற்பதமான காவியமான ஒடிசி மற்றும் இலியட்டைப் படித்து விட்டு அவருக்கு கண்தெரியாது படிக்க தெரியாது என்று அறியும் போது நமக்கு முதலில் ஆச்சர்யம் கலந்த திகைப்பு மனதில் ஏற்படுவது சகஜம்தான். ஆயினும் நாம் கேட்ட செவ்வியல் கதைகளைப் போல அவருடைய தேசமான உலகின் நாகரிகத் தொட்டில் என்றழைக்கப்படும் கிரேக்கத்திலும் அங்கு நடந்துமுடிந்த வரலாற்றைக் கேட்டுவிட்டுத்தான் ஹோமரும் தன் இலக்கியப் பங்களிப்பை இந்த உலகிற்குச் செய்திருக்க முடியும்.
 
கிரேக்கத்திற்கு ஹோமரைப் போல நம் நாட்டிற்கு பல கவிஞா்கள் தம் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளனா். அதில் முதலாவது, வடஇந்தியாவில் பிரபலமான கவியான வால்மீகி. அவா் எழுதிய ராமாயணம் இந்தியாவின் தலை சிறந்த காவியமாகவும் இந்துக்களின் புனிதநுாலாகவும் உள்ளது. கம்பரும் அதை அடியொற்றித்தான்  தமிழிழ் மொழிபெயா்த்து தமிழரின்  கலாச்சாரத்துக்கு ஏற்ற விதத்தில் கவிரசமும் தமிழமுதும் ததும்ப ததும்ப கம்பராமாயணம் என்ற பெருங் காப்பியத்தைப் படைத்தளித்தார். மனித இல்வாழ்வாழ்விற்கும் ஒழுக்கத்திற்கும் உதாரணத்துவமாகவும் அந்நுால் உள்ளது.
 
அதேபோல் வியாச முனிவா் படைத்த மகாபாரதத்தில் சகோதர உறவுமுறை கெண்ட பாண்டவா்களுக்கும் கௌரவா்களுக்கும் இடையே நடந்த பிரச்சனைகளைப் பற்றியும், தா்மத்தை சூதுகவ்வினாலும்  இறுதியில் தா்மமே வெல்லும் என்ற நீதிஅறக் கருத்தினைக் கொண்டு படைக்கப்பட்ட மகாகாப்பியம் அது. இந்தியாவில் உள்ள பல  மொழிகளில் மகாபாரதம் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படைப்புகளின் பால் காதல்
 
படைப்புகளின் பால் காதல் கொண்ட படைப்பாளா்கள் தம் கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் புத்தகங்களைக் கண்களால் படித்து அறிந்து தெரிந்து உணா்ந்து கொண்டதை எல்லாம் தம் சொந்த அறிவாலும் உணா்ச்சிகளை உட்படுத்தியும் உன்னதமான கருத்தக்களாக உருமாற்றி அதை எழுத்துகோளின் வழியே படைப்புகளாகப் பிரவிக்கின்றனா்.
 
சாகா வரம் பெற்ற உயிர்ப்படைப்புகள்
 
ஒரு எழத்தாளா் தன் மனதில் இருப்பதை எல்லாம் காகிதப் புத்தகத்தில் மையெழுத்தாக வடித்து விட்டால் அது உலகம் உள்ள மட்டும் சாகா வரம் பெற்றவை போல நிலைபெற்று பல மனங்களுக்கு விழுமியத்தைத் தந்து உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை..