வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Murugan
Last Updated : வியாழன், 21 ஜூலை 2016 (14:48 IST)

கபாலி படம் சூப்பர்! : சினிமா விமர்சகரின் பார்வை

கபாலி படத்தை அமெரிக்காவில் பார்த்த உமர் சாந்து என்ற சினிமா விமர்சகர், தன்னுடைய சமூக வலை பக்கத்தில் இந்த படத்தை பற்றி எழுதியுள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்து நடித்துள்ள இந்தப்படம் நாளை உலகமெங்கும் 5000 திரை அரங்கில் வெளியாகியிறது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கபாலி படத்தின் விமர்சனத்தை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஒருவேளை, அவர் கபாலி படத்தின் சிறப்புக் காட்சியை அமெரிக்காவில் பார்த்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  படத்தின் கதை பற்றி அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அவர் எழுதியுள்ள கபாலி விமர்சனம் இதுதான்:
 
கபாலி படம் அருமையாக உள்ளது. இந்த வருடத்தின் வசூலில் கபாலி முதல் இடத்தைப் பிடிக்கும். நடிப்பை பொறுத்த வரை கபாலி படம் ரஜினி என்ற நடிகரை சுற்றியே நகர்கிறது. அருமையா நடிப்பை வெளிப்படுத்துவதில் படத்தின் எந்த காட்சியிலும் ரஜினி எந்த குறையும் வைக்கவில்லை. முழுக்க முழுக்க ரஜினிகாந்துக்கான படம் இது.
 
ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அவர் நடித்ததிலேயே இதுவே மிகச்  சிறந்த படமாகும். இந்த படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. 
 
இயக்குனர் பா. ரஞ்சித் இந்த படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களில் வைத்து ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. பாடல்கள் அருமை. எடிட்டிங் படத்திற்கு பெரிய பலம். கதையும், திரைக்கதையும் அருமையாக உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பு காட்சிகளும், சண்டை காட்சிகளும் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.  ரஜினி பேசும் வசனங்கள் படத்தின் பெரிய பலம். 
 
மொத்தத்தில் கபாலி குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த படத்திற்கு 5ற்கு 4 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.