1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை தொடர் இறக்கம்.. 60 ஆயிரத்தில் இருந்து 56 ஆயிரம் வந்துவிட்டதா?

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டு வரும் நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னால் 60 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை தற்போது 56 ஆயிரத்து நெருங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து ரூபாய்   7,085 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1080 குறைந்து ரூபாய்  56,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,590 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,720 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பேஜர் தாக்குதலை உளறிய நேதன்யாகு! பழிவாங்க ஏவுகணைகளை பறக்கவிட்ட ஹெஸ்புல்லா!