1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

2 நாள் ஏற்றத்திற்கு மீண்டும் சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம் இதோ..!

சென்னை
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரிய அளவில் ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய்   6,805 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 54,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,275 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்..! 11 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்..!!