வாரத்தின் முதல் நாளே ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த இரண்டு மணி நேரத்துக்கு முன் தொடங்கிய நிலையில், இந்த இரண்டு மணி நேரத்தில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருவதை அடுத்து முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியபோது ஏற்றத்தில் இருந்த நிலையில், ஒரு சில நிமிடங்களில் திடீரென இறக்கத்தை சந்தித்தது. தற்போது மீண்டும் ஏற்றத்தை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் இன்று வர்த்தகம் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 5 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 81,190 புள்ளிகளின் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 46 புள்ளிகள் குறைந்து 24,807 புள்ளிகளின் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva