1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Plummets by ₹2,000 Per 8 Grams; Silver Also Falls

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

தங்கம் விலை சரிவு
சென்னையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாகச் சரிந்துள்ளது.
 
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.97,600 என்ற புதிய உச்சத்தில் விற்பனையான நிலையில், இன்றைய விலையில் ரூ.2,000 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.95,600-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.250 குறைந்து, ரூ.11,950-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.13000 குறைந்து வெள்ளி ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு, நகை வாங்குவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!