ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (13:06 IST)

அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு நிறுத்தி வைப்பு..!

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும்  ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 1,749 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
 
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 
டிடிவி தினகரனின் பிரமாணப் பத்திரம் இணையத்தில் தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.