துலாபாரம் வேண்டுதலின் போது ’ தராசு முறிந்து சசிதரூர் காயம் ’

sasitharur
Last Modified திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:58 IST)

அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசரம் செய்து வருகின்றனர். காங்கிரஸா - பாஜகவா
என்று தேசிய அரசியலில் ஆட்சி அமைக்கவேண்டி தீவிரமாக களப்பணியில் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன.
sasitharur
இந்நிலையில் கேரள
மாநிலத்தில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் சசிதரூர் கோவிலில் வேண்டுதல் நிறைவேற்றுதல் செய்யும் போது காயம் அடைந்தார்.

சசிதரூர் காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கேரளாவில் உள்ள ஒரு கோவில் துலாபாரத்தில் தனது
எடைக்கு எடையாய் வாழைப்பழம்
செலுத்தி வேண்டுதல் செய்யும் போது தராசு முறிந்து அவரது தலையில் விழுந்தது.

sasitharur

இந்த விபத்தில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது தலையில் அவருக்கு ஆறு தையல் போடப்பட்டுள்ளது.

தராசு முறிந்ததில் அவருக்கு காலிலும் முறிவும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
sasitharurஇதில் மேலும் படிக்கவும் :