உளறல் மன்னனான திண்டுக்கல் சீனிவாசன் : கலாய்க்கும் நெட்டிஷன்ஸ்

sinivasan
Last Modified புதன், 17 ஏப்ரல் 2019 (14:42 IST)
தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிக்ளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறினார். இதற்கு சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
நேற்று திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் ஜோதிமுத்து என்பவர் போட்டியிடுகிறார்.
 
இவருக்கு ஆதரவாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். 
 
அப்போது ஜோதிமுத்து என்பதற்குப் பதில் சோலைமுத்து என்று மாற்றி சொல்லிவிட்டார்.இதனைக் கேட்டு பாமகவினர் சற்று அதிர்ச்சி  அடைந்தனர்.
 
இதனையடுத்து அருகில் நின்றிருந்த ஜோதிமுத்து அவரைப் பார்த்த போது, சுதாரித்து ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
 
ஏற்கனவே ஒரு பிரசாரத்தில் பாமக வேட்பாளரை ஆதரித்து பேசும் போது ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு, இன்று மீடியா அன்பர்களுக்கு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது உளறினாலும் கூட அதிகம் உளறிக்கொட்டி நெட்டிஷன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் திண்டுக்கல் சீனிவாசன் என்று சமூக  ஊடகத்தில் தகவல் பரவிவருகிறது.

 
 
 


இதில் மேலும் படிக்கவும் :