‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தின் போஸ்டர்
சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு, நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படம், ‘யாகாவாராயினும் நாகாக்க’. அதுவும் அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையால் அவர்களின் நட்பும் வாழ்க்கையும் சந்திக்கும் சோதனைகளைப் பற்றி இந்தப் படம் விவரிக்கிறது. அதற்கு ஏற்ப, புகழ்பெற்ற திருக்குறள் வாசகமான, ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்பதையே படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளனர்.
ஆதி - நிகிதா கல்ராணி இருவரும் ஜோடியாக நடிக்க, மிதுன் சக்கரவர்த்தி, நாசர், பசுபதி, கிட்டி, நரேன், ஹரிஷ், பிதாமகன் மஹாதேவன் ஆகியோர் நடித்துள்ளனர். ரிச்சா பலோட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சத்ய பிரபாஸ் பினிசெட்டி இயக்குகிறார்.
இப்படத்தின் போஸ்டர் இங்கே: