அஜீத்தின் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியீடு


Murugan| Last Modified வியாழன், 24 செப்டம்பர் 2015 (08:39 IST)
நடிகர் அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய படத்தின் பெயரும், ஃபஸ்ட் லுக்கும் வெளியாகியிருக்கிறது.

 

 
இயக்குனர் சிவாவின் ஏற்கனவே அஜித் “வீரம்” என்ற படத்தில் நடித்திருந்தார். பின் அதே இயக்குனரின் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத படித்தில் நடித்து வருகிறார்.  அஜீத் நடிக்கும் 56 வது படம் இது என்பதால், அவரது ரசிகர்கள், அப்படத்தை தல 56 என்று அழைத்து வந்தனர். 
 
இப்படத்தின் தலைப்பு நேற்று இரவு 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. "வேதாளம்” என்பதுதான் அந்த தலைப்பு.  தலைப்பை அறிவித்த சில நிமிடங்களில் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 
 
படத்தின் தலைபோடு சேர்த்து, போனசாக படத்தின் ஃபஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். இது அஜீத் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படத்திற்கு இசை அனிருத். ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் சூரி நடிக்கும் இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :