1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Modified: திங்கள், 15 மே 2017 (15:20 IST)

தயாரிப்பாளர்களுக்கு ஆட்டம் காட்டும் காதல் ஜோடி

படத்தின் புரமோஷனுக்கு வராமல் காதல் ஜோடி ஆட்டம் காட்டுவதாகப் புலம்புகின்றனர் தயாரிப்பாளர்கள்.

 
குழந்தைகளுக்குப் பிடித்தமான பறக்கும் விளையாட்டுப் பொருளின் பெயரைக் கொண்ட படத்தில் நடித்துள்ளனர் மார்க்கெட்  நடிகையும், அவருடைய காதலரும். படப்பிடிப்பில் ஒரே கேரவனுக்குள் புகுந்துகொண்டு அவர்கள் அடித்த லூட்டியால், தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்.
 
இந்நிலையில், புரமோஷனுக்கு வரச்சொல்லி போன் போட்டால், இருவருமே தயாரிப்பாளர்களுக்கு ஆட்டம் காட்டுகிறார்களாம்.  “நான் தான் அடுத்த ‘தல’. அவரும் புரமோஷனுக்குப் போக மாட்டார், நானும் வர மாட்டேன்” என்கிறாராம் நடிகர்.  நடிகையோ, இதற்கும் மேல். போனைக் கூட அட்டண்ட் பண்ணாமல் அசால்ட்டாக இருக்கிறாராம். விரைவில் பஞ்சாயத்து  வைக்க வேண்டியது இருக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.