1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 5 மே 2017 (21:52 IST)

நயன்தாரா தேவையில்லை! தமன்னா, ஹன்சிகா போதும்! சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அதிரடி முடிவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன், விளம்பரங்களை அடுத்து சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், அவரது முதல் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை சரவணன் ஏற்கனவே மறுத்திருந்தார்.



 


இந்த நிலையில் அவருடன் விளம்பர படத்தில் டான்ஸ் ஆடிய தமன்னாவுக்கும் ஹன்சிகாவுக்கு பெரும் வருத்தமாம். சரவணன் நடிக்க வருகிறார் என்றால் ஹீரோயின் நாங்களாகத்தானே இருக்க வேண்டும், அது எப்படி நயன்தாரா பெயர் அடிபடலாம் என்று அண்ணாச்சியிடம் நேரிலேயே கோவித்து கொண்டார்களாம்.

இதனால் இதுவரை நடிக்கும் மூடில் இல்லாத சரவணன், தற்போது ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டதாகவும், அந்த படத்தின் இரண்டு நாயகிகளாக தமன்னா, ஹன்சிகா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அச்சாரமாக சரவணா ஸ்டோரின் அடுத்த விளம்பரத்தில் 'வாங்க ஹீரோ' என்று தமன்னாவும், ஹன்சிகாவும் கூறும் வசனம் ஒன்றும் உள்ளதாம்