ரூ.10 கோடி கொடுப்பது கவர்ச்சிக்காகத்தான்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு இயக்குனர் பதில்


sivalingam| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (07:28 IST)
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரின் 151வது படத்தில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நடிகை சம்மதித்துள்ளார்,. அந்த படத்திற்காக அவர் கேட்ட ரூ.10 கோடியை தர தயாரிப்பாளரும் சம்மதித்துவிட்டார்.


 
 
ஆனால் இந்த படத்தில் அந்த நடிகை கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியுள்ளாராம். அந்த நடிகை அதே நடிகருடன் ஏற்கனவே கவர்ச்சியாக நடித்தவர் தான் என்றாலும் இப்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இமேஜ் இருக்கும் நிலையில் கவர்ச்சியாக நடிக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம் அந்த சூப்பர் நடிகை
 
ஆனால் ரூ.10 கோடியை விடவும் அவருக்கு மனம் வரவில்லை. இதுகுறித்து கூடிய சீக்கிரம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நடிகை இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :