1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (13:09 IST)

கழுவி ஊற்றியதால் பட்டத்தைத் துறந்த நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருக்கக் கூடிய அனைவருக்குமே அந்தப் பட்டத்தின்மீது ஒரு கண் இருக்கிறது. அந்தப் பட்டத்தின் பெயர், ‘சூப்பர் ஸ்டார்’. உச்ச நடிகரின் அந்தப் பட்டத்துக்கு, அதட்டினாலே ‘உச்சா’ போகக்கூடிய நடிகர்கள் கூட ஆசைப்படுவது, காலத்தின் கொடுமை.

 
 
ஜெயலலிதா இறந்த பிறகுதான் அவர் பதவிக்கு ஆசைப்பட்டார் சசிகலா. ஆனால், உச்ச நடிகர் உயிருடன் இருக்கும்போதே, அதுவும் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே போட்டிபோடுகிறார்கள். உச்ச நடிகருக்கு நெருக்கமான நடன நடிகரும்  அந்தப் பட்டத்துக்கு ஆசைப்பட்டு, சமீபத்தில் வெளியான படத்தில் தனக்குத்தானே போட்டுக் கொண்டார். ஆனால், சமூக  வலைதளங்களில் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கலாய்த்தும் பல பதிவுகள் இடப்பட்டன. 
 
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகர், அந்தப் பட்டத்தை துறப்பதாக அறிவித்துள்ளார். இவர் மிகப்பெரிய விளம்பர விரும்பி என்பது  மெரினா போராட்டத்தில் உடன் இருந்தவர்களுக்குப் புரியும்.