1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Modified: திங்கள், 8 மே 2017 (12:28 IST)

மாமனாருக்கு நடிகையை ஏற்பாடு செய்யும் ஒல்லி நடிகர்

மாமனாருக்கு ஏற்ற ஜோடி நடிகையைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ஒல்லி நடிகர்.

 
 
உச்ச நட்சத்திர நடிகரின் புதிய படம் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. மும்பை தாதாவைப் பற்றிய இந்தப் படத்தை, மருமகனான ஒல்லி நடிகர் தயாரிக்கிறார். உச்ச நட்சத்திரத்தை டானாக வைத்து போன படத்தை இயக்கியவரே இந்தப் படத்தையும் இயக்குகிறார். 
 
இந்தப் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை ஒருவரைக் கமிட் செய்து வைத்திருந்தனர். கால்ஷீட்டில் ஏற்பட்ட குழப்பங்களால், அந்த நடிகை கழண்டு கொண்டுவிட்டார். ஏற்கெனவே இரண்டு முறை உச்ச நட்சத்திரத்துடன் நடிக்க மறுத்தவர்தான் அந்த  நடிகை. இதனால், மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வேறொரு பாலிவுட்நடிகையைத் தேடிவருகிறார் ஒல்லி நடிகர்.