1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Updated : திங்கள், 27 மார்ச் 2017 (14:37 IST)

எந்த நேரத்தில் லீலைகள் வெளிவருமோ என்ற பதட்டத்தில் பப்ளி நடிகை!

சமீபத்தில் சிங்கர் ஒருவர் வெளியிட்ட திரையுலக பிரபலங்களின் லீலைகள் தமிழ் சினிமாவையே கதிகலங்க வைத்தது. தற்போது ஒரு நடிகை அவருடைய மேனேஜர் மூலமாக தன்னுடைய லீலைகள் வெளியாகிவிடுமோ என்ற பதட்டத்தில்  இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
 
பப்ளி நடிகை எந்த நேரத்தில் தன்னுடைய மேனேஜரிடம் எல்லா பொறுப்புகளையும் கொடுத்தாரோ அதிலிருந்து, நடிகைக்கு இதுவரை வாய்ப்புகள் எதுவும் அமையவில்லையாம். நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஆழ்ந்த சிந்தனையில், ஆராய்ச்சியில் இருந்தவருக்கு காரணம் மேனேஜர் ஆடிய விளையாட்டு என்று தெரிந்ததாம். அதனால், கோபமாகி  வேலையே விட்டு விரட்டினார் பப்ளி நடிகை.
 
இதனை தொடர்ந்து கோபமடைந்த மேனேஜர், பப்ளி நடிகை அவ்வபோது விளையாடிய சிறு சிறு விளையாட்டுக்களை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறாராம். அந்த லீலைகளை தற்போது வெளியிடப் போகிறேன் என்று அந்த மேனேஜர் நடிகையை  மிரட்டுகிறாராம். இதனால், நடிகை மிகவும் பதட்டத்தில் இருக்கிறாராம்.