1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (17:56 IST)

விதியை மீறிய ‘வேலைக்காரன்’… வாயைத் திறக்காத சங்கத் தலைவர்

விதியை மீறிய ‘வேலைக்காரன்’ படத்தின் விளம்பரத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சங்கத் தலைவர் மெளனம் காக்கிறார் என்கிறார்கள்.


 

 
உயர நடிகர் இரண்டு சங்கங்களில் பொறுப்பேற்றதில் இருந்தே பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். ஆனாலும், அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் தண்ணீரில் எழுதியதாகத்தான் நினைக்கிறார்கள் சங்க உறுப்பினர்கள். அப்படியொரு சம்பவம்தான் நேற்று நடந்திருக்கிறது.
 
‘வேலைக்காரன்’ படத்தின் முழுப்பக்க விளம்பரம் நேற்றைய நாளிதழ்களில் வெளியாகியிருக்கிறது. சங்க விதிப்படி கால் பக்கத்துக்கு மேல் எந்த படத்துக்கும் விளம்பரம் கொடுக்கக் கூடாது. ஆனால், அதையும் மீறி முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும், சங்கத் தலைவர் எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறாராம்.